இந்த தாக்குதலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் உறுதி கூறியுள்ளார்.
ஜோர்டான் நாட்டில் முகாம்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருந்தபோது, திடீரென ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், 3 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 25 பேர் காயமடைந்து உள்ளனர்.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது என கூறப்படுகிறது.
இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் உறுதி கூறியுள்ளார். காசாவுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் எதிரி படைகளால் அமெரிக்க வீரர்கள் கொல்லப்படும் முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.