கொரிய தீபகற்ப நாடுகளான வடகொரியா, தென்கொரியா இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ராணுவம் மற்றும் உளவு தகவல்கள் பரிமாற்றத்தில் தென்கொரியா முன்னேற்றம் கண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை பொருட்படுத்தாமல், சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல், அண்டை நாடுகளை அச்சுறுத்துகிற வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் வடகொரியா கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல்கள் கொரிய நாடுகளுக்கு கிழக்கே உள்ள கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வந்தன. அப்போது திடீரென அந்த கப்பல்களில் இருந்து நிலத்தில் இருந்து வானத்தை தாக்கும் நவீன ரக ஏவுகணைகளை சோதித்து பறிக்கப்பட்டுள்ளது. வானத்தை நோக்கி சரமாரியாக ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள் இலக்கை வெற்றிக்கரமாக தாக்கி அளித்துள்ளதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.