கைது செய்யப்பட்டவர்களில் 3 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது, மேலும் 5 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 120 கிராம் ஹெரோயின், 98 ஐஸ் மற்றும் 31,611 போதை மாத்திரைகள் உள்ளடங்குவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 123 கிலோகிராம் கஞ்சா மற்றும் 9,708 கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட நபர்களில் 527 போதைப்பொருள் சந்தேக நபர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.