யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலிருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஜோசப் மக்சிமஸ் சுரேஷ்குமார் (வயது 32) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.
இந்த இளைஞர் மேலும் இருவருடன் குருநகரிலிருந்து படகில் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளார். கடலில் படகில் தங்கி தொழிலில் ஈடுபட்ட நிலையில், இரவு மூவரும் படகினுள் நித்திரைக்குச் சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது அதில் இருந்த குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளார்.
இளைஞர் காணாமல்போன விடயம் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளத்துறை, பொலிஸார், கடற்படையினர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.