ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் (30) கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு ஹைட் பார்க் மைதானம் மற்றும் பஞ்சிகாவத்தையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.