Friday, November 22, 2024
Google search engine
Homeசினிமாமூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன்,...

மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார். இவரது வாழ்க்கை கதை ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸானது டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

மும்பை திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் ஆமிர் கான், சல்மான் கான் மற்றும் ஷாருக் கான். இந்த 3 நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பது வழக்கம்.

அகில இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் இவர்களின் திரைப்படங்கள் பல திரையரங்குகளில் வெளியாவதால் அவற்றின் வர்த்தக எல்லையும் பரந்து விரிந்துள்ளது. இதன் காரணமாக இவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள், இத்திரைப்படங்களில் ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புகுத்த நினைக்கின்றனர்.

அதில் ஒன்றாக சமீப காலங்களாக சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் ஷாருக் கானும், ஷாருக் கான் கதாநாயகானாக நடிக்கும் திரைப்படங்களில் சல்மான் கானும், சில நிமிடங்களே திரையில் தோன்றும் கேமியோ (cameo) காட்சியில் தோன்றுகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் வெளியான ஷாருக் கான் நடித்து திரைக்கு வந்த “பதான்” திரைப்படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதே போல், நவம்பர் மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சல்மான் கான் நடித்த “டைகர்-3” திரைப்படத்தில் ஷாருக் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒரு முன்னணி கதாநாயகனின் திரைப்படத்தில் திரையில் வேறொரு முன்னணி கதாநாயகன் தோன்றுவது இரு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து சல்மான் கான் கூறியதாவது:

நானும் ஷாருக் கானும் பரஸ்பரம் இருவர் படங்களிலும் கேமியோ வேடங்கள் செய்கிறோம். எங்கள் இருவரின் ரசிகர்களும் அதை விரும்புவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் இருவருக்கும் திரையை தாண்டியும் ஆழமான நட்பு உள்ளது; இது கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. எங்கள் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது சமூக வலைதளங்களில் சச்சரவு நடைபெறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால், நான் சமூக வலைதளங்களை அதிகம் பார்ப்பவன் இல்லை. ஆனால், நான் எப்பொழுதும் என் ரசிகர்களிடம் சொல்வது என்னவென்றால், ஷாருக் எனக்கு சகோதரன்; எனவே, உங்களுக்கும் சகோதரன் – அவருக்கு எந்த தீங்கும் நேர்ந்து விட கூடாது – என்பதுதான். நானும் ஷாருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம்.

இவ்வாறு சல்மான் தெரிவித்தார்.

பிரபல கதாநாயகர்கள், வேறொரு கதாநாயகரின் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வருவது திரைப்படங்களின் வெற்றிக்கும், அதிக வசூலுக்கும் உதவுவதாக திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments