Friday, November 22, 2024
Google search engine
Homeஇந்தியா'பிரைடு சிக்கன்' வாங்க பணம் தராததால் ஆத்திரம்: மனைவியை குத்திக் கொன்ற கணவன் - அதிர்ச்சி...

‘பிரைடு சிக்கன்’ வாங்க பணம் தராததால் ஆத்திரம்: மனைவியை குத்திக் கொன்ற கணவன் – அதிர்ச்சி சம்பவம்

உத்தரப் பிரதேசத்தில் ‘பிரைடு சிக்கன்’ (Fried Chicken) வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்த கணவன் கத்தரிக்கோலால் மனைவியை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் உள்ள பிரேம் நகர் காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பிரேம் நகர் காலனி பகுதியில் வசித்து வருபவர் ஷாஹித் ஹுசைன். அவர் தையல்காரராக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி நூர் பானோ (46 வயது). இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஹுசைன், சந்தையில் இருந்து பிரைடு சிக்கன் வாங்குவதற்காக பானோவிடம் பணம் கேட்டுள்ளார். பானோ பணம் தர மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகு பானோ, வெளியே சென்று சிக்கன் வாங்கி வந்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையே தகராறு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஹுசைன், கத்தரிக்கோலால் பானோவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பானோ, அங்கு உயிரிழந்தார். அவர்களின் குழந்தைகள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஹுசைனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleமூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார். இவரது வாழ்க்கை கதை ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸானது டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
Next articleபெண் நிருபர் சவும்யா விஸ்வநாதன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments