விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.
மேலும், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, தனது கணவரின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தால் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பிரியங்கா பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.