Monday, December 23, 2024
Google search engine
Homeஇலங்கைஅதிக ஹெரோயின் பாவனையால் யாழ்ப்பாணத்தில் இளைஞன் மரணம்

அதிக ஹெரோயின் பாவனையால் யாழ்ப்பாணத்தில் இளைஞன் மரணம்

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று முன்தினம் இரவு உணவருந்தி விட்டு நித்திரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் நேற்று (30) அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்த வேளை அவர் அசைவற்று காணப்பட்டார்.

காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனைகளின் போது, அவர் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments