கனடாவின் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் சிறு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இரு மாகாணங்களுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோர்ன்வெல் மற்றும் வெலிபீல்ட் பகுதிகளில் 3.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வு காரணமாக எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஒட்டாவாவின் தென் பகுதி, எம்ரூன் மற்றும் கோர்ன்வெல் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.