கனடாவின் மானிட்டோபா எல்லைப் பகுதியில் சுமார் 400 கிலோ கிராம் எடையுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பியரே பகுதியில் இதுவரையில் மீட்கப்பட்ட அதிகளவான போதைப்பொருள் தொகை இது என தெரிவிக்கப்படுகிறது.
methamphetamine வகை போதைப் பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிலிருந்து வின்னிபெக் நோக்கி பயணித்த ட்ரக் வண்டி ஒன்றை சோதனை இட்டபோது குறித்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த போதைப் பொருட்கள் பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் ஐம்பது மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் ட்ரக் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.