Sunday, December 22, 2024
Google search engine
Homeவிளையாட்டுடேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்...

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய டென்னிஸ் அணிக்கு மிகமுக்கிய பிரமுகர்கள்போல் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை நேரில் காண மொத்தம் 500 பேருக்குதான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அனுமதி அளித்துள்ளது. தொடக்க நாளில் நடக்கும் ஒற்றையர் ஆட்டத்தில் ராம்குமார் (இந்தியா)-அய்சம் உல்-ஹக் குரேஷி (பாகிஸ்தான்) ஆகியோர் மோதுகிறார்கள். இந்த போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் அகீல் கான் (பாகிஸ்தான்) – ஸ்ரீராம் பாலாஜி (இந்தியா) மோதுகின்றனர். 2-வது நாளில் நடைபெறும் இரட்டையர் ஆட்டத்தில் பர்கத்துல்லா-முஜாமில் முர்தசா (பாகிஸ்தான்) – யுகி பாம்ப்ரி-சகெத் மைனெனி (இந்தியா) இணையும், மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார் – அகீல் கான், அய்சம் உல்-ஹக் குரேஷி – ஸ்ரீராம் பாலாஜி ஆகியோரும் மோதுகிறார்கள். டேவிஸ் கோப்பை போட்டி வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒருபோதும் தோற்றதில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக 7 முறை மோதியுள்ள இந்திய அணி எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது. தனது ஆதிக்கத்தை இந்த போட்டியிலும் இந்திய அணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் குரூப்-1ல் நீடிக்கும். மாறாக தோற்றால் குரூப்2-க்கு தரம் இறங்கும் நிலை ஏற்படும்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். இந்திய அணியில் ரோகித் 14 ரன், சுப்மன் 34 ரன், ஸ்ரேயாஸ் 27 ரன், பட்டிதார் 32 ரன், அக்சர் 27 ரன், பரத் 17 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதில் சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் கடந்த 18 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் திண்டாடி வருகிறார்.

குறிப்பாக இத்தொடரின் முதல் போட்டியில் 23, 0 ரன்களில் அவுட்டானதால் அணியிலிருந்து நீக்குமாறு ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள். இந்நிலையில் 2வது ஆட்டத்திலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸ் கூட முதல் 10 போட்டிகளில் தடுமாறியுள்ளார். எனவே கில்லுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று விமர்சகர்களுக்கு கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் காலிஸ் 22 என்ற சராசரியை மட்டுமே கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் அவர் இந்த விளையாட்டில் விளையாடிய மகத்தான வீரராக உருவெடுத்தார். சுப்மன் கில் மீண்டு வருவதற்கான நேரத்தை கொடுங்கள் ப்ளீஸ். அவர் நல்ல வீரர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments