Sunday, December 22, 2024
Google search engine
Homeஇந்தியாபுத்தாண்டு லாட்டரி குலுக்கல்: சபரிமலைக்கு வந்த புதுச்சேரி அய்யப்ப பக்தருக்கு ரூ.20 கோடி பரிசு

புத்தாண்டு லாட்டரி குலுக்கல்: சபரிமலைக்கு வந்த புதுச்சேரி அய்யப்ப பக்தருக்கு ரூ.20 கோடி பரிசு

கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. அந்த லாட்டரியின் ஒரு சீட்டின் விலை ரூ.400 ஆகும். மொத்தம் 45 லட்சம் சீட்டுகள் விற்பனையாகி இருந்தன. இந்த குலுக்கலில் முதல் பரிசு ரூ.20 கோடி எக்ஸ் சி 224091 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு கிடைத்து இருந்தது.

இந்த எண் கொண்ட லாட்டரி சீட்டு பாலக்காட்டில் மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கி வந்து திருவனந்தபுரத்தில் உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் முதல் பரிசு பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் சபரிமலைக்கு வந்த புதுச்சேரியை சேர்ந்த 33 வயதான பக்தர் தரிசனத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு வந்தபோது இந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியதாக கூறியுள்ளார். மேலும் அவர், தனது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால், கேரள லாட்டரி இயக்குனரகமும் அவரது பெயரை வெளியிட மறுத்து விட்டது. நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தனது நண்பர்களுடன் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு வந்த அந்த வாலிபர் முதல் பரிசு கிடைத்த அந்த லாட்டரி சீட்டை அலுவலகத்தில் ஒப்படைத்து சான்றிதழ் பெற்றுக் கொண்டார். ரூ.20 கோடி பரிசு தொகையில், அதிர்ஷ்டசாலியான அய்யப்ப பக்தருக்கு வரி நீங்கலாக ரூ.12.60 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 

Previous articleடேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய டென்னிஸ் அணிக்கு மிகமுக்கிய பிரமுகர்கள்போல் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை நேரில் காண மொத்தம் 500 பேருக்குதான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அனுமதி அளித்துள்ளது. தொடக்க நாளில் நடக்கும் ஒற்றையர் ஆட்டத்தில் ராம்குமார் (இந்தியா)-அய்சம் உல்-ஹக் குரேஷி (பாகிஸ்தான்) ஆகியோர் மோதுகிறார்கள். இந்த போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் அகீல் கான் (பாகிஸ்தான்) – ஸ்ரீராம் பாலாஜி (இந்தியா) மோதுகின்றனர். 2-வது நாளில் நடைபெறும் இரட்டையர் ஆட்டத்தில் பர்கத்துல்லா-முஜாமில் முர்தசா (பாகிஸ்தான்) – யுகி பாம்ப்ரி-சகெத் மைனெனி (இந்தியா) இணையும், மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார் – அகீல் கான், அய்சம் உல்-ஹக் குரேஷி – ஸ்ரீராம் பாலாஜி ஆகியோரும் மோதுகிறார்கள். டேவிஸ் கோப்பை போட்டி வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒருபோதும் தோற்றதில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக 7 முறை மோதியுள்ள இந்திய அணி எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது. தனது ஆதிக்கத்தை இந்த போட்டியிலும் இந்திய அணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் குரூப்-1ல் நீடிக்கும். மாறாக தோற்றால் குரூப்2-க்கு தரம் இறங்கும் நிலை ஏற்படும்.
Next articleவருகிற 5ம் தேதி இந்தியா வருகிறார் சுவிஸ் வெளியுறவு துறைத் தலைவர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments