கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி உக்ரைனுக்கு திடீர் விஜயம் செய்துள்ளார். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜோலி உக்ரைனின் தலைநகர் கிவ்விற்கு சென்றுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலென்ஸ்கீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
உக்ரைன் சிறுவர்கள் ரஷ்ய படையினரால் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜோலி இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்த உள்ளார். சிறுவர்களை பகடை காய்களாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என ஜோலி தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தை ஆரம்பிக்க முன்னதாக கனடிய ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தப்பட்ட உக்ரைனிய சிறுவர்களை மீட்பதற்கான தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.