Sunday, December 22, 2024
Google search engine
Homeஇலங்கைஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் மட்டக்களப்பு – கல்லடியில் இன்றைய தினம் (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருகோணமலையிலிருந்து சென்றவர்கள் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்படையினரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெருகல் பாலத்திலுள்ள பொலிஸ் சேதனைச் சாவடியில் வழிமறித்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அனைவரையும் பஸ்ஸில் இருந்து இறக்கி விசாரணைக்கு உட்படுத்தியதுடன், பஸ்ஸையும் சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்திற்காக கொண்டு சென்ற பதாகைகளும் ஏனைய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், பொலிஸாரால் அனைவருடைய விபரங்களும் பெறப்பட்டுள்ளதோடு  பஸ்ஸின் சாரதி, நடத்துனரின் ஆவணங்களும் பறித்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திரும்பிச் செல்லாவிட்டால் வழக்குத் தாக்கல் செய்வதாகவும் குறிப்பிட்டதோடு புகைப்படங்களை எடுத்தவர்களுடைய கைத் தொலைபேசியை வாங்கி அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர் குறித்த பஸ் மீண்டும் திருகோணமலைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் 53 பேர் குறித்த பஸ்ஸில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments