பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நெருங்கிய உதவியாளர் முகமது குரேஷி (வயது 67). இவர் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது அரசு ரகசியங்களை கசிய விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் கடந்த 30-ந் தேதி இம்ரான்கான் மற்றும் முகமது குரேஷி ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதனையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு முகமது குரேஷி தேர்தலில் நிற்க தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.