ஹொரணை, பாணந்துறை வீதியின் குலுபன பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் பயணித்த முச்சக்கரவண்டி, பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம, ரைகம பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஆர்.ஏ.தனுஜா பிரியதர்ஷனி (வயது 40) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹொரண நகருக்கு வந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை, தங்காலை அம்பாந்தோட்டை பிரதான வீதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாந்தோட்டையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற சிறிய காரொன்றும், ஹங்கமவில் இருந்து அம்பலாந்தோட்டை நோக்கிச் சென்ற வானும் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.