Friday, November 22, 2024
Google search engine
Homeஇந்தியாசென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தங்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தங்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது

சென்னை மாநகராட்சி சீர்மிகு நகர சிறப்பு திட்டத்தின் கீழ், வாகன நிறுத்த மேலாண்மையில் ஒப்பந்த அடிப்படையில், வாகன நிறுத்தம் தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக தனியார் நிறுவனம் மூலம் வாகன நிறுத்தத்திற்கான கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான இடங்களில், தனியார் சேவை நிறுவனத்தின் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி, தியாகராய நகரில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்த கட்டணமாக 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 எனவும், 2 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், பாண்டி பஜார் வாகன நிறுத்தத்திற்கு சிறப்பு கட்டணமாக 4 சக்கர வாகனங்னளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.60 எனவும், 2 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.15 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி மூலம் அனுமதிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டண வரம்பை விட அதிகமாக கட்டணத்தை தனியார் சேவை நிறுவனங்கள் வசூலிக்க கூடாது. அவ்வாறு வசூலிக்கப்பட்டால், பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணிலும், @chennaicorp என்ற எக்ஸ் வலைதளத்திலும் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். மேலும், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலும் புகார் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments