Sunday, December 22, 2024
Google search engine
Homeஇலங்கைவவுனியாவை சேர்ந்த ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

வவுனியாவை சேர்ந்த ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இன்றையதினம் (07) ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சமடைந்துள்ளதாக மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நெடுங்குழி பகுதியை சேர்ந்த நந்தகுமார்  அவரது மனைவி  மற்றும் அவரது 3 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை  சேர்ந்த  5 பேர் செவ்வாய்க்கிழமை (06) மன்னாரில் இருந்து ரூ.1.50 இலட்சம்  கொடுத்து   படகில் புறப்பட்டு இன்று (7) அதிகாலை இராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையில் சென்றடைந்துள்ளனர்

தகவலறிந்த இராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் இவர்களை மீட்டு மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக  இலங்கையிலிருந்து  தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை  293 ஆக உயர்ந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments