நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர் சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதி பொறுப்பின் கீழ் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.