கனடாவின் எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மூன்று தடவைகள் தரையிறக்குவதற்கு முயற்சி மேற்கொண்ட போதும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த விமானம் தரையிறக்கப்பட வேண்டிய விமான நிலையத்தில் தரையிறங்காது மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி திரும்பியுள்ளது.
ரொறன்ரோவிலிருந்து இருந்து நியூ பவுண்ட்லாண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள சென் ஜோன்ஸ் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்படவிருந்தது.
மூன்று தடவைகள் குறித்த விமானத்தை சென்ஜோன்ஸ் விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டது,
மூன்று தடவைகளிலும் விமானத்தை தரையிறக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விமானி விமானம் புறப்பட்ட ரொறன்ரோவிற்கே விமானத்தை திசைதிருப்பி உள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு விமானத்தை தரையிறக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மூன்று மணித்தியால பயண தூரம் இறுதியில் ஆறு மணித்தியாலங்கள் 43 நிமிடங்கள் வரையில் நீடித்துள்ளது.