அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகொன்றின் மீன் சேகரிப்பு தொட்டிக்குள் உருவாகியதாகக் கூறப்படும் விஷ வாயுவை சுவாசித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட 8 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய 7 மீனவர்களும் தற்போது பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.