Sunday, December 22, 2024
Google search engine
Homeவிளையாட்டுடி.என்.பி.எல். ஏலம்; 8 அணிகளால் வாங்கப்பட்ட 61 வீரர்கள் - விவரம்

டி.என்.பி.எல். ஏலம்; 8 அணிகளால் வாங்கப்பட்ட 61 வீரர்கள் – விவரம்

8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடக்கிறது. இதன் லீக் ஆட்டங்கள் சேலம், திண்டுக்கல், நெல்லை, கோவை ஆகிய நகரங்களில் நடக்கிறது. இறுதிப்போட்டி சென்னையில் அரங்கேறுகிறது.

இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. பதிவு செய்திருந்த 675 வீரர்கள் பட்டியலில் இருந்து 144 பேர் இறுதி செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டனர். ஏலத்தை பிரபல வர்ணனையாளர் சாரு ஷர்மா நடத்தினார். ஏல நிகழ்ச்சியில் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், கேப்டன்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அணியின் தேவைக்கு தகுந்தபடி வீரர்களை குறிவைத்து ஏலம் கேட்டனர்.

இந்திய 20 ஓவர் அணிக்காக ஆடிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் முதல் நபராக ஏலம் விடப்பட்டார். அவரது அடிப்படை விலை ரூ.3 லட்சமாகும். அவரை எடுக்க அணிகள் அதிக ஆர்வம் காட்டியதால் அவரது தொகை மளமளவென உயர்ந்தது. இறுதியில் ரூ.22 லட்சத்துக்கு ஏலம் போனார். அவரை திருப்பூர் தமிழன்ஸ் அணி வாங்கியது.

இதன் மூலம் டி.என்.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை 27 வயதான சாய் கிஷோர் பெற்றார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு சாய் சுதர்சன் (கோவை கிங்ஸ்) ரூ.21.60 லட்சத்துக்கு ஏலம் போனதே அதிகபட்சமாக இருந்தது.

இதேபோல் ஆல்-ரவுண்டர் சஞ்சய் யாதவும் ரூ.22 லட்சத்துக்கு விலை போனார். அவரை திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதனால் சஞ்சய் யாதவ், சாய் கிஷோரின் அதிக விலை சாதனையை சமன் செய்தார்.

இதற்கு அடுத்தபடியாக ஆல்-ரவுண்டர் ஹரிஷ் குமார் ரூ.15.4 லட்சத்துக்கு சேலம் ஸ்பார்டன்ஸ் அணியால் வசப்படுத்தப்பட்டார். 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ரூ.12.2 லட்சத்துக்கு ஆல்-ரவுண்டர் அபிஷேக் தன்வரை தங்கள் பக்கம் இழுத்தது. இந்திய அணிக்காக ஆடிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனை ரூ.11.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி வாங்கியது.

வேகப்பந்து வீச்சாளர் ஜி. பெரியசாமி (ரூ.8.80 லட்சம்), டேரில் பெராரியோ (ரூ.4 லட்சம்), சூர்யா (ரூ.4 லட்சம்), அஸ்வின் கிறிஸ்ட், ஆர். சதீஷ் (தலா ரூ.2 லட்சம்), ஷாஜகான் (ரூ.1 லட்சம்), சந்தோஷ் குமார், ஆந்த்ரே சித்தார்த் (தலா ரூ.50 ஆயிரம்) ஆகியோரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சொந்தமாக்கியது. 8 அணிகளும் மொத்தம் 61 வீரர்களை ஏலத்தில் எடுத்தது. 83 வீரர்கள் விலைபோகவில்லை.

ஏலம் குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கூறுகையில், ‘சாய் கிஷோர் இந்தியாவின் தலைச்சிறந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பேட்டர். அவரை திருப்பூர் அணி எடுத்தது மிக முக்கிய திருப்பமாக இருந்தது. அதே நேரத்தில் சிலம்பரசன் போன்ற தரமான வீரர் எதிர்பார்த்ததை விட குறைந்த தொகைக்கு ஏலம் போனார். ஏலத்தில் திட்டமிட்டபடி எல்லாம் நடந்து விடாது. இதுவும் கிரிக்கெட் போட்டி போன்றது தான். அன்றைய நாளில் சிறப்பாக செயல்படுபவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.

ஹரிஷ் போன்ற ஆல்-ரவுண்டரை இழந்ததால் எங்களுக்கு ஒரு ஆல்-ரவுண்டர் தேவையாக இருந்தது. அதனால் தான் அபிஷேக் தன்வரை எடுத்தோம். ஒட்டுமொத்தத்தில் எங்களது அணி தேர்வு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஏலம் போன வீரர்கள் விவரம்;

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

அபிஷேக்தன்வர்-ரூ.12.20 லட்சம்

ஜி.பெரியசாமி- ரூ.8.80 லட்சம்

டேரில் பெராரியோ- ரூ.4 லட்சம்

பி.சூர்யா- ரூ.4 லட்சம்

அஸ்வின் கிறிஸ்ட்- ரூ.2 லட்சம்

ஆர்.சதீஷ்- ரூ.2 லட்சம்

ஷாஜகான்- ரூ.1 லட்சம்

ஆந்த்ரேசித்தார்த்-ரூ.50 ஆயிரம்

சந்தோஷ்குமார்- ரூ.50 ஆயிரம்

சேலம் ஸ்பார்டன்ஸ்

ஹரிஷ்குமார்- ரூ.15.40 லட்சம்

விவேக்-ரூ.11 லட்சம்

பொய்யாமொழி-ரூ.7¼ லட்சம்

ஆஷிக் ஸ்ரீனிவாஸ்-ரூ.2 லட்சம்

ராபின்சிங் பிஷ்த்- ரூ.2 லட்சம்

ஷிஜித் சந்திரன்- ரூ.1 லட்சம்

ராஜன்- ரூ.50 ஆயிரம்

சுதன் சஞ்சீவ்- ரூ.50 ஆயிரம்

விஷால் வைத்யா-ரூ.50 ஆயிரம்

தருண்குமார்- ரூ.50 ஆயிரம்

யாஷ் அருண்மொழி-ரூ.50 ஆயிரம்

கோவை கிங்ஸ்

மனிஷ்- ரூ.50 ஆயிரம்

மீரான் ரஹில்- ரூ.50 ஆயிரம்

விக்னேஷ்- ரூ.50 ஆயிரம்

மதுரை பாந்தர்ஸ்

சதுர்வேத்- ரூ.6 லட்சம்

சசிதேவ்- ரூ.5.20 லட்சம்

அலெக்சாண்டர்- ரூ.1½ லட்சம்

அஜய் சேத்தன்- ரூ.70 ஆயிரம்

கார்த்திக் மணிகண்டன்-ரூ.70 ஆயிரம்

அக்ரம் கான்- ரூ.50 ஆயிரம்

கிரண் ஆகாஷ்- ரூ.50 ஆயிரம்

திருச்சி கிராண்ட் சோழாஸ்

சஞ்சய் யாதவ்- ரூ.22 லட்சம்

அர்ஜூன் மூர்த்தி- ரூ.7¼ லட்சம்

சரவணா குமார்- ரூ.4.8 லட்சம்

கே.விக்னேஷ்- ரூ.2.8 லட்சம்

ஆர்யா யோஹன் மேனன்- ரூ.50 ஆயிரம்

முகமது ஆஷிக்- ரூ.50 ஆயிரம்

நிர்மல் குமார்- ரூ.50 ஆயிரம்

ரெஜின்- ரூ.50 ஆயிரம்

ஷியாம் சுந்தர்- ரூ.50 ஆயிரம்

நெல்லை ராயல் கிங்ஸ்

மொகித் ஹரிஹரன்-ரூ.10.20 லட்சம்

சிலம்பரசன்-ரூ.5 லட்சம்

கவுதம்- ரூ.1.6 லட்சம்

அபிலாஷ்- ரூ.50 ஆயிரம்

கோகுல் மூர்த்தி- ரூ.50 ஆயிரம்

கிருபாகர்-ரூ.50 ஆயிரம்

திண்டுக்கல் டிராகன்ஸ்

சந்தீப் வாரியர்- ரூ.10½ லட்சம்

ஆஷிக்- ரூ.50 ஆயிரம்

இளையராஜா- ரூ.50 ஆயிரம்

ஓம் நிதின்- ரூ.50 ஆயிரம்

ராக்கி- ரூ.50 ஆயிரம்

ரோஹன் ராஜூ-ரூ. 50 ஆயிரம்

திருப்பூர் தமிழன்ஸ்

சாய் கிஷோர்- ரூ.22 லட்சம்

நடராஜன்- ரூ.11¼ லட்சம்

மான் பாப்னா- ரூ.2.30 லட்சம்

மதிவாணன்- ரூ.2.20 லட்சம்

ரோஹித்- ரூ.2 லட்சம்

அமித் சாத்விக்- ரூ.50 ஆயிரம்

ஜீவானந்தம்- ரூ.50 ஆயிரம்

கார்த்திக் சரண்- ரூ.50 ஆயிரம்

அனோவங்கர்- ரூ.50 ஆயிரம்

ராம் குமார்- ரூ.50 ஆயிரம்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments