07வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டுள்ளார்.
இந்த மாநாடு அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் 09 முதல் 10 வரை நடைபெற உள்ளது.
இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி சென்றுள்ளார்.