இந்தியாவின் நாகப்பட்டினத்தையும் திருகோணமலை எண்ணெய்க் குதத்தையும் இணைக்கும் வகையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி வாரத்தினை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இந்தியாவிற்கு சென்றுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, உத்தேச எண்ணெய்க் குழாய் நிர்மாணப் பணிகள் தொடர்பில் இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் நேற்று முன்தினம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இந்திய அரசாங்கம் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தினை முன்மொழிந்துள்ளது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.