12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஒடிசாவில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதன்படி இன்று மாலை கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2 கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ஒரு கோலும், ஈஸ்ட் பெங்கால் அணி 2 கோலும் அடித்தன. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் 3-0 என நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் – ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன.