Friday, October 4, 2024
Google search engine
Homeவிளையாட்டுஅவரை உடனடியாக அணியில் சேர்த்து விளையாட வைக்க கூடாது - ஆகாஷ் சோப்ரா

அவரை உடனடியாக அணியில் சேர்த்து விளையாட வைக்க கூடாது – ஆகாஷ் சோப்ரா

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடியிருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறி இருந்தனர்.

இவ்வேளையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சியுள்ள கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் மீண்டும் அவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். அதேபோன்று காயம் குணமடைந்தால் மட்டுமே அவர்கள் விளையாடுவார்கள் என்றும் பி.சி.சி.ஐ தெளிவுபடுத்தி உள்ளது.

இந்நிலையில் காயத்திற்கு பிறகு மீண்டும் அணிக்குள் வந்துள்ள ரவீந்திர ஜடேஜாவை உடனடியாக பிளேயிங் 11-ல் சேர்த்து விளையாட வைக்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்:-

”ரவீந்திர ஜடேஜாவை 3-வது டெஸ்ட் போட்டியில் உடனடியாக சேர்த்து விளையாட வைக்க கூடாது. ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் அவர் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்று விதத்திலுமே அசத்தலாக செயல்படக் கூடியவர். எனவே அவரை பத்திரமாக கையாள வேண்டும். அவரது உடற்தகுதியை கணக்கில் வைத்துதான் அவரை விளையாட வைக்கலாமா? வேண்டாமா? என்பதை குறித்து யோசிக்க வேண்டும்.

அதேபோன்று கே.எல் ராகுல் முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவரை நேரடியாக பிளேயிங் லெவனில் விளையாட வைக்கலாம் ஏனெனில் அவர் தற்போது விக்கெட் கீப்பராக இல்லாமல் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதால் அவரை நேரடியாக விளையாட வைக்கலாம்” என்றும் கூறினார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments