Monday, December 23, 2024
Google search engine
Homeஇலங்கைமக்கள் விடுதலை முன்னணியை இந்தியா அழைத்ததை வரவேற்கின்றோம்- பந்துல குணவர்தன

மக்கள் விடுதலை முன்னணியை இந்தியா அழைத்ததை வரவேற்கின்றோம்- பந்துல குணவர்தன

மக்கள் விடுதலை முன்னணியினை (ஜே.வி.பி) இந்தியா அழைத்ததை போன்று ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் அழைப்பு விடுக்க வேண்டும் என ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெல்லவாய பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்- “இந்திய எதிர்ப்புக் கொள்கைகளை கடைப்பிடித்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்ததை நாம் வரவேற்கின்றோம்.

அதே போன்று ஜப்பான், தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் விடுதலை முன்னணியினரை உத்தியோகபூர்வமாக அழைக்க வேண்டும்.

நாட்டு மக்களை தவறான வழிநடத்தும் வகையில் போலி அரசியல் வாக்குறுதிகளை வழங்குவதை அரசியல்வாதிகள் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.அரசியல் வாக்குறுதிகளினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் அரசியல் வாக்குறுதிகளை அனைவரும் தவிர்த்துக் கொள்வது அத்தியாவசியமானது.

இந்தியா, சீனா உள்ளிட்ட முன்னிலை நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதற்காக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்” என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments