நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 124 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டில் இழப்பு அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.
மேலும், கடந்த ஆண்டு ஏப்ரலில் 664 கோடி ரூபாயை நெல் சந்தைப்படுத்தல் சபை கருவூலத்திற்கு செலுத்தவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.