கனடாவில் பணியிடங்களில் பெண்கள், ஆண்கள் துன்புறுத்தப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
30 வீதமான ஆண் பணியாளர்கள் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். 50 வீதமான பெண்கள் பாலியல் அல்லது வேறும் வகையில் துன்புறுத்தல்களை அனுபவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
25 முதல் 34 வயது வரையிலான பணியாளர்களே அதிகளவில் இவ்வாறு துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோரினால் பெண் பணியாளர்கள் துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.