Friday, November 22, 2024
Google search engine
Homeஇந்தியாஎன்ஜீனியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கை உச்சவரம்பை நீக்க ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரை

என்ஜீனியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கை உச்சவரம்பை நீக்க ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரை

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லுாரிகளில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கின்றனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உச்சவரம்பாக 240 மாணவர்கள் வரையில் மட்டுமே சேர முடியும்.

இந்த நிலையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 240 மாணவர்கள் வரை சேர்க்கலாம் என்ற நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) திட்டமிட்டுள்ளது. வரும் 2023-24-ம் கல்வியாண்டு முதல், என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் 240 மாணவர்கள் வரை சேர்க்கலாம் என்ற நடைமுறையை நீக்க ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் எவ்வளவு மாணவர்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்றும், அதிகரிக்கும் இடங்களுக்கு ஏற்ப பேராசிரியர்கள் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரை செய்துள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ.-யின் இந்த பரிந்துரை, கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய என்ஜினீயரிங் துறை படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், மற்ற பாடங்களில் மாணவர் சேர்க்கை குறையவும் வாய்ப்பை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments