சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பாட்டை இழந்து வருவதாகவும், பல முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று தெரிவித்துள்ளார்.
சஜித் நிலைத்திருக்க வேண்டுமானால் ஐ.தே.க வில் இணைவதற்கான கதவு திறந்தே உள்ளது. அவர் தற்போது தனது முந்தைய போட்டியாளரான SLPP உடனேயே இணைந்து பணியாற்றுகிறார் எனவும் பாலித ரங்கே பண்டார மேலும் கூறினார்.