ரொறன்ரோவில் சீரற்ற காலநிலை தொடர்பிலான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு தொடர்பில் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (15) வியாழக்கிழமை கடுமையான பனிப்பொழிவு நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் சுமார் பத்து சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை முதல் பனிப்பொழிவு காணப்படும் எனவும் நாள் முழுவதும் இந்த பனிப்பொழிவு நிலமையை அவதானிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் வடமேற்கு பகுதியில் அதிக அளவு பனிப்பொழிவு நிலவும் எனவும், மேலும் வட மேற்கு பகுதியில் மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் திடீரென வானிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக மோட்டார் வாகன போக்குவரத்தில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் பயணம் செய்யும்போது பனிமூட்டம் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.