கனடாவில் சூப்பர் போல் கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற கன்சஸ் அணி வெற்றிப் பேரணி ஒன்றை நடத்தி இருந்தது. இந்தப் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 சிறுவர்கள் உள்ளிட்ட 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.