பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய, நாட்டை விட்டு தப்பிச் சென்ற 42 சந்தேக நபர்களுக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்த வெளியிடுகையில் அவர் இதனை கூறினார். சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.