அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி பெறும் அனைவருக்கும் எவ்வித தடங்கலும் இன்றி அஸ்வெசும பலன்கள் கிடைக்குமெனவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும முதற்கட்டத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத குடும்பங்களுக்கும் விண்ணப்பங்களை சமர்ப்பித்தும் வீட்டுத் தகவல் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தப்படாத எந்தவொரு நபர்களும் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன இந்த விடயங்களை தெரிவித்தார்.