அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2024ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்கான முதலாம் தவணை இன்று (19) ஆரம்பமாகியது.
இதே வேளை, கொவிட் தொற்று பரவல் காரணமாக மாற்றமடைந்த பாடசாலை தவணை முறைகளை, 2025 ஆம் ஆண்டு முதல் சீரமைக்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.