போப் ஆண்டவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் துபாயில் நடைபெறும் ஐ.நா.அவையின் உலக காலநிலை மாநாட்டில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் 87 வயதை நிறைவுசெய்ய உள்ள போப் பிரான்சிஸுக்கு, இளம் வயதிலேயே அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஒருவாரமாக அவர் நுரையீரல் வீக்கம் மற்றும் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வாடிகன் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தநிலையில் மருத்துவர்கள் பரிந்துரையை ஏற்று, போப் ஆண்டவரின் துபாய் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.