Wednesday, December 4, 2024
Google search engine
Homeகனேடியபெண்கள் பிரீமியர் லீக்: மும்பையை வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் அபார வெற்றி

பெண்கள் பிரீமியர் லீக்: மும்பையை வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் அபார வெற்றி

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் 2வது தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 6வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – உ.பி. வாரியர்ஸ் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் 16.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. இதனால், மும்பையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் அபார வெற்றிபெற்றது. உ.பி. வாரியர்சின் கிரண் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments