Saturday, September 21, 2024
Google search engine
Homeசினிமாஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்படும் கட்டாஷ்ரதா

அதிநவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்படும் கட்டாஷ்ரதா

கன்னடா திரையுலகில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான கட்டாஷ்ரதா-வில் கதாநாயகியாக நடித்தவர் மீனா குட்டப்பா. இவர் நடிகர் அஸ்வின் ககுமனுவின் தாயார் ஆவார். கிரிஷ் கசரவள்ளி இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளியான கட்டாஷ்ரதா படம் பெரும் வெற்றி பெற்றதோடு, திரையுலகில் மிகச் சிறந்த படம் என்றும் போற்றப்பட்டது.

சர்வதேச மற்றும் இந்திய திரையுலகின் பரம்பரியம் மிக்க சிறப்பான திரைப்படம் என்ற வகையில், இதனை அதிநவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக திரைத்துறையை சேர்ந்த ஜார்ஜ் லூகாஸ், மார்டின் ஸ்கார்சீ மற்றும் திரைப்பட பாரம்பரிய அறக்கட்டளை இணைந்து ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய அஸ்வின் ககுமனு, “ஜார்ஜ் லூகாஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் பல்வேறு இதர இயக்குனர்கள் மீது சிறுவயதில் இருந்தே எனக்கு பிரமிப்பு இருந்து வந்தது. அவர்களது படங்களில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இந்த துரையில் என் அறிவை வளர்த்துக் கொள்ளும் புத்தகங்களை எனக்கு வாங்கி தர வேண்டும் என என் தாயாரிடம் கேட்பேன்.”

“ஜார்ஜ் லூகாஸ், மார்டின் ஸ்கார்சீ மற்றும் அவர்களின் அறக்கட்டளை மற்றும் திரைப்பட பாரம்பரிய அறக்கட்டளை இணைந்து இந்த படத்தின் 50-வது ஆண்டு விழாவை ஒட்டி அதனை புதுப்பிக்கின்றனர். இந்த படத்தின் ரீல் NFDC-இல் இருந்து இத்தாலிக்கு அனுப்பப்பட்டு விட்டது. அங்கு இந்த படத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments