Wednesday, December 4, 2024
Google search engine
Homeகனேடியரொறன்ரோவில் பெருந்தொகை போலி வயாகரா மாத்திரைகள் மீட்பு

ரொறன்ரோவில் பெருந்தொகை போலி வயாகரா மாத்திரைகள் மீட்பு

ரொறன்ரோவில் பெருந்தொகை போலி வயகரா மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கனடாவின் சுகாதார திணைக்களம் இந்த சட்டவிரோத போலி மாத்திரைகளை கைப்பற்றியுள்ளது.

போலி வயகரா மாத்திரைகளை கொள்வனவு செய்தவர்கள் உடன் அவற்றை பயன்படுத்துவதனை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்காப்ரோவின் எக்லிங்டன் அவன்யூவில் அமைந்துள்ள Daisy Mart மற்றும் நோர்த் யோர்க்கின் ஜேன் வீதியில் அமைந்துள்ள MJ Mini Mart ஆகிய கடைகளில் வயகரா மாத்திரை கொள்வனவு செய்தவர்கள் அவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலியான வயகரா மாத்திரைகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு நிறுவனங்களிலும் விற்பனை செய்யப்பட்ட வயகரா மாத்திரைகள் உரிய முறையில் பொதியிடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான போலி மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதன் மூலம் ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments