ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலத்தில் 4.73 வீதமாக காணப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரம் இன்று 5 வீதமாக வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதனால் பொருளாதாரமும் வலுவடைந்திருக்கிறது. அதனை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே டிஜிட்டல் பொருளாதார மாநாடு ஜூலை மாத இறுதியில் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. அதனூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணிகளை வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.
அதே போல், இலங்கை சர்ட் நிறுவனத்தின் ஊடாக தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டம் இவ்வருடத்திற்குள் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து சைபர் பாதுகாப்பு அதிகார சபையும் விரைவில் நிறுவப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.