கனடாவின் முன்னாள் பிரதமர் பிறயன் முல்ரொனி தனது 84 ஆம் வயதில் காலமானார். கனடாவின் 18வது பிரதமராக முல்ரொனி கடமையாற்றியுள்ளார்.
கியுபெக் மாகாணத்தின் Baie-Comeau இல் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பமொன்றில் முல்ரொனி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ஜோன் டெபின்பேர்க்கரின் ஆலோசகர் என்ற அடிப்படையில் முல்ரொனி தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
1983ஆம் ஆண்டு கொன்சர்வடிவ் கட்சியின் தலைவராக தெரிவாகிய முல்ரொனி, 1984ஆம் ஆண்டில் கனடாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
முல்ரொனி தனது பதவிக் காலத்தில் நாட்டில் பல்வேறு மாற்றங்களை செய்தவர் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமூகங்களுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் முல்ரொனி சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தார் என பாராட்டப்படுகின்றது.