Wednesday, December 4, 2024
Google search engine
Homeகனேடியகனடாவிற்கு வந்து மூன்று நாட்களில் உயிரிழந்த பெண்

கனடாவிற்கு வந்து மூன்று நாட்களில் உயிரிழந்த பெண்

கனேடிய நகரமொன்றில், குளிரில் பல மணி நேரம் காத்திருந்து மரணமடைந்த புகலிடக் கோரிக்கையாளரான பெண்ணொருவருக்கு  மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கென்யா நாட்டவரான Delphina Ngigi (வயது 46) என்ற பெண், கனடாவில் கால் வைத்து மூன்று நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி, Mississauga நகரிலுள்ள புகலிடக்கோரிக்கை மையம் ஒன்றை வந்தடைந்துள்ளார், நான்கு குழந்தைகளின் தாயான Delphina.

மதியம் ஒரு மணிக்கு புகலிடக் கோரிக்கை மையத்தை வந்தடைந்த நிலையில், இரவு 8.00 மணி வரை மையத்திற்கு வெளியே குளிரில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரவு 8.00 மணிக்கு மையத்தின் முகப்பு அறையில் தூங்க அனுமதிக்கப்பட்ட Delphina, மறுநாள் காலை குளிக்கும் போது நிலைகுலைந்து சரிந்துள்ளார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Delphina, மாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவர் எதனால் உயிரிழந்தார் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

Delphinaவின் கணவர் சில மாதங்களுக்கு முன் புற்றுநோயால் மரணமடைந்ததால், ஏற்கனவே அவரது குடும்பம் துக்கத்திலிருக்க, Delphinaவின் மரணம் குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் பரவத் துவங்கியதால், தம்பதியரின் நான்கு பிள்ளைகளிடம் அவரது மரணம் குறித்து அவசரமாக தெரிவிக்கும் ஒரு நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கிறார் Delphinaவின் சகோதரியான Faith Wairimu.

இந்நிலையில், North York இல் உள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை Delphina விற்கு அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டனர்.

Delphina யார் என்றே தெரியாத நிலையில் அவருக்காக மக்கள் அஞ்சலி செலுத்தத் திரண்டதை அறிந்த Delphinaவின் சகோதரியான Faith Wairimu, இது மனிதநேயத்தைக்  காட்டுகிறது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments