கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். போதை மருந்து பயன்பாடு காரணமாக இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் 14024 பேர் போதை மருந்து பயன்பாட்டினால் உயிரிழந்துள்ளனர். இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 6.4 மரணங்கள் பதிவாகின்றன.
இவ்வாறு பதிவாகும் மரணங்களில் 70 வீதமான மரணங்கள் 30 முதல் 59 வயது வரையிலானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒழுங்குபடுத்தப்படாத போதைப் பொருட்களினால் இவ்வாறு மரணங்கள் பதிவாகி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
போதை மாத்திரைகளினால் மரணங்கள் பதிவாவதனைத் தொடர்ந்து மாகாணத்தில் பொதுச் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.