கடுமையான தீர்மானங்கள் ஊடாகவே நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அழகிய வார்த்தைகள், வாக்குறுதிகளால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது. நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் வற் வரி பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணம் வழங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.