Friday, November 22, 2024
Google search engine
Homeசினிமாகேரளா அரசாங்கத்தின் புதிய ஓடிடி தளம்

கேரளா அரசாங்கத்தின் புதிய ஓடிடி தளம்

நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும்.

அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை.

மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய பிரச்சனைகளையும் அதிகமாக பேசக்கூடியவை.

பெரும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் பிற மொழி பல படங்களுக்கு போட்டி போடும் அளவில் எளிமையான படங்களை முந்நிறுத்தி வசூல்களை அள்ளும் திறன் கொண்டது மலையாள சினிமா. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகிய பிரமயுகம்,மஞ்சும்மல் பாய்ஸ். ப்ரேமலு போன்ற படங்களே சாட்சி.

இப்போது அதற்கு மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக கேரளா அரசாங்கம் ஒரு முயற்சி எடுத்துள்ளது.கேரளா அரசாங்கம் இந்தியாவில் முதன் அரசாங்கத்திற்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்க உள்ளது.இதுவரை ஓடிடி தளங்கள் என்றால் பெருன்பான்மையாக இருப்பது அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்லிக்ஸ், zee 5,ஹாட் ஸ்டார்.ஆஹா போன்றவைகள்தான் .

கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

சிஸ்பேஸ் ஓடிடி தளம் உருவாக்கிய நோக்கத்தைப் பற்றி செய்தியாளர்களிடம்”சிஸ்பேஸ் OTT துறையில் வளர்ந்து வரும் ஏற்றதாழ்வுகள் மற்றும் உள்ளடக்கத் தேர்வு மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் பலதரப்பட்ட சவால்களுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்” என்று கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவருமான ஷாஜி என் கருண் கூறினார்.

சிஸ்பேஸ் ஓடிடி தளம் KSFDC என்ற மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்க படும் எனவும்,மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும்,இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை 60 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments