சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், “36 “36வயதினிலே” படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஜோதிகாவுக்கு வழங்கினார்.
மார்ச் 4 ஆம் தேதி தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் பட்டியலை வெளியிட்டது.
அதில் “36 வயதினிலே” படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது பட்டியலில் இடம் பெற்றது.
“36 வயதினிலே” எனும் படம் 2015 ஆம் ஆண்டு ரோசன் ஆண்ட்ரூஸ்சால் இயக்கப்பட்டு,சந்தோஷ் நாரயணன் இசையில்,2டி எண்டர்டெய்ன்மண்ட் நிறுவனம் தயாரித்தது. இத்திரைப்படத்தில் ஒரு கனவை தொலைத்த நடுத்தர பெண்ணின் வலியையும், அவளுக்கு கிடைக்க பெறாத ஆசைகளையும், தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் உணர்வுகளை கவர்ந்திருப்பார். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் இருக்கிறது.
இந்நிலையில், இன்று முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்று வரும் இவ்விழாவில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், “36 வயதினிலே” படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஜோதிகாவுக்கு வழங்கினர்.
“36 வயதினிலே எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம், விருது எப்போ கிடைச்சாலும் சந்தோஷம்தான்” என்று விருதைப் பெற்ற ஜோதிகா பத்திரிக்கையாளரிடம் பேட்டிக் கொடுத்தார்.