Thursday, September 19, 2024
Google search engine
Homeசினிமாதமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்த திரைப்பிரபலங்கள்

தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்த திரைப்பிரபலங்கள்

நேற்று சென்னை ராஜ ரத்தினம் கலையரங்கத்தில் 2015 தமிழக திரைப்பட விருது வழங்கும் விழா நடைப்பெற்றது

கவுதம் கார்த்திக் அவருடைய எக்ஸ் பக்கத்தில் விருது அளித்து கவுரவித்த தமிழ்நாடு மாநில அரசுக்கும், தனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

நேற்று சென்னை ராஜ ரத்தினம் கலையரங்கத்தில் 2015 தமிழக திரைப்பட விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.

இதில் ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த கதையாசிரியருக்கான விருது மோகன் ராஜா தனி ஒருவன் படத்திற்காக பெற்றார். இறுதிச்சுற்று படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை சுதா கொங்கரா பெற்றார்.

சிறந்த நடிகருக்கான விருதை கவுதம் கார்த்திக் ‘வை ராஜா வை’ படத்திற்கு பெற்றார்.

தனி ஒருவன் படம் அதிக விருதை அள்ளியது. அரவிந்த சாமி சிறந்த வில்லனுக்கான விருதும்.ராம்ஜி சிறந்த ஒளிபதிவாளர் விருதும்,கோபி க்ருஷ்ணா சிறந்த எடிடர்கான விருதும், பிருந்தா மாஸ்டர் சிறந்த நடன இயக்குநர்கான விருதும் பெற்றனர்.

இதையும் படியுங்கள்: #VKM ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறார் இயக்குனர் வெற்றிமாறன்

மாதவன் இறுதிச்சுற்றுக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.ஜோதிகா 36 வயதினிலே படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை சிங்கம் புலி வென்றார். சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை தேவதர்ஷினி வென்றார்.கிப்ரான் உத்தம வில்லன் மற்றும் பாபநாசம் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர்கான விருதை வென்றார்.

ஜோதிகா விருதை வாங்கி தான் மிகவும் சந்தோஷமாக உணர்வதாக செய்தியாளர்களிடம் பேட்டிக் கொடுத்தார்.கவுதம் கார்த்திக் அவருடைய எக்ஸ் பக்கத்தில் விருது அளித்து கவுரவித்த தமிழ்நாடு மாநில அரசுக்கும், தனது ரசிகர்களுக்கும், தனது குடும்பத்துக்கும், இயக்குனர் ஐஷ்வர்யா ரஜினிகாத்துக்கும். தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனதுக்கு அவரின் நன்றியை தெரிவித்துள்ளார்.

நேற்று விருது வழங்கப்பட்ட பட்டியல்.

சிறந்த படம் முதல் பரிசு – தனி ஒருவன்

சிறந்த படம் இரண்டாம் பரிசு – பசங்க 2

சிறந்த படம் மூன்றாம் பரிசு – ப்ரபா

சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு – இறுதிச்சுற்று

பெண்கள் முன்னேற்றதிற்கான சிறந்த படம் – 36 வயதினிலே

சிறந்த நடிகர் – மாதவன் [இறுதிச்சுற்று]

சிறந்த நடிகை – ஜோதிகா[36 வயதினிலே]

சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு – கவுதம் ராஜா [ வை ராஜா வை]

சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு – ரித்திக்கா சிங் [இறுதிச்சுற்று]

சிறந்த வில்லன் – அரவிந்த் சாமி [தனி ஒருவன்]

சிறந்த நகைச்சுவை நடிகர் – சிங்கம்புலி [ அஞ்சுக்கு ஒன்னு]

சிறந்த நகைச்சுவை நடிகை – தேவ தர்ஷினி [ திருட்டு கல்யாணம், 36 வயதினிலே]

சிறந்த குணச்சித்திர நடிகர் – தலைவாசல் விஜய் [அபூர்வ மகான்]

சிறந்த குணச்சித்திர நடிகை – கவுதமி [ பாபநாசம்]

சிறந்த இயக்குநர் – சுதா கொங்கரா {இறுதிச்சுற்று]

சிறந்த கதையாசிரியர் – மோகன் ராஜா [ தனி ஒருவன்]

சிறந்த வசன எழுத்தாளர் – சரவணன் [கத்துக்குட்டி]

சிறந்த இசையமைபாளர் – ஜிப்ரான் [ உத்தம வில்லன், பாபநாசம்]

சிறந்த பாடலாசிரியர் – விவேக் [36 வயதினிலே]

சிறந்த பின்னணி பாடகர் [ஆண்] – கானா பாலா {வை ராஜா வை}

சிறந்த பின்னணி பாடகர் [ பெண்] – கல்பனா ராகவேந்தர் [36 வயதினிலே]

சிறந்த ஒளிப்பதிவாளர் – ராம்ஜி [தனி ஒருவன்]

சிறந்த ஒளிப்பதிவாளர் – ராம்ஜி (தனி ஒருவன்)

சிறந்த ஒலி வடிவமைப்பாளர் – ஏ.எல்.துக்காராம், ஜே.மகேஸ்வரன் (தாக்க தாக்க)

சிறந்த எடிட்டர் – கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)

சிறந்த கலை இயக்குனர் – பிரபாஹரன் (பசங்க 2)

சிறந்த ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர் – டி ரமேஷ் (உத்தம வில்லன்)

சிறந்த நடன இயக்குனர் – பிருந்தா (தனி ஒருவன்)

சிறந்த ஒப்பனை – சபரி கிரிஷன் (36 வயதினிலே, இறுதிச்சுற்று)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – வாசுகி பாஸ்கர் (மாயா)

சிறந்த குழந்தை கலைஞர் – மாஸ்டர் நிஷேஷ், பேபி வைஷ்ணவி (பசங்க 2)

சிறந்த டப்பிங் கலைஞர் (ஆண்) – கௌதம் குமார் (36 வயதினிலே)

சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்) – ஆர் உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments