Sunday, September 8, 2024
Google search engine
Homeஇலங்கைகடும் பாதுகாப்பிற்கு மத்தியில் வெடுக்குநாறிமலை ஆலய தரிசனம்

கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் வெடுக்குநாறிமலை ஆலய தரிசனம்

வவுனியா வெடுக்குநாறிமலையை சுற்றி  பொலிஸாரால் கடுமையான பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் 5 கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் ஆலய தரிசனத்தை முன்னெடுத்தனர்.

மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு அது தொடர்பான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் பிரதம பூசகர் மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகியோர்    நெடுங்கேணி பொலிஸாரால் நேற்று (07) கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அரச காட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து  ஆலயத்தை சுற்றி விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான பாதைக்கு பொலிஸ் வீதித்தடை போடப்பட்டு. அந்த பகுதிக்குள் வசிப்பவர்கள் மாத்திரம் பொலிஸாரின் விசாரணைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை மகாசிவராத்திரி வழிபாட்டிற்காக தூர இடங்களில் இருந்து வருகைதந்த பொதுமக்கள், உள்ளே செல்லமுடியாதவாறு பிரதான வீதியில் தரித்து நின்றனர்.

சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், வேலன் சுவாமிகள்,ரவிகரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்

அவர்களது வழிகாட்டலுடன் காலை 10 மணியளவில் பொதுமக்கள் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமையால் ஒலுமடு பிரதான வீதியில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரம் காட்டுப்பாதையூடாக நடந்துசென்று பொதுமக்கள் ஆலயத்தை அடைந்தனர்.

இதேவேளை குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள விகாரைகளில் இருந்து பௌத்த மதகுருக்களும் சிங்கள மக்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments